டெல்லி டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா, இலங்கை திணறல்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2வது நாளான நேற்று இந்தியா 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது.
இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 243 ரன்களும், தமிழக வீரர் முரளிவிஜய் 155 ரன்களும் ரோஹித் சர்மா 65 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே விக்கெட்டை இழந்தது. பின்னர் பெரரா 42 ரன்களிலும் டிசில்வா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மாத்யூஸ் மற்றும் சண்டிமால் 57 மற்றும் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.