டெல்லி தவிர வட இந்திய விமான நிலையங்களை மூட உத்தரவு
புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா நேற்று அதிரடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய நிலையில் இன்று பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் அந்த தாக்குதலை இந்தியா முறியடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் பாகிஸ்தான் இரண்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறியதில் உண்மை இல்லை என்றும் இந்திய விமானிகள் யாரும் கைது செய்யப்படவும் இல்லை என்றும் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி தவிர வட இந்திய விமான நிலையங்கள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.