டெல்லி தேர்தல் வாக்குப்பதிவின் போது பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டு கொலை: பெரும் பரபரப்பு

டெல்லி தேர்தல் வாக்குப்பதிவின் போது பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டு கொலை: பெரும் பரபரப்பு

டெல்லியில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நேற்று திடீரென பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
டெல்லியில் உள்ள பத்பர்கஞ்ச் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பிரீத்தி என்பவர் நேற்று இரவு உடலில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

பெண் உதவி காவல் ஆய்வாளர் ப்ரித்தி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென அருகே அடையாளம் தெரியாத ஒரு நபர் ப்ரீத்தியை துப்பாக்கியால் சுட்டதாகவும் அந்த நபர் சுட்ட குண்டு ப்ரீத்தியின் தலையில் பட்டு அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தெரிகிறது இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply