டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து
டெல்லி நாராயணாவில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தொழிற்சாலையில் தீவிபத்து குறித்த தகவல் தெரிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி வருகின்றனர்
இதுவரை 30 தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளதாகவும், இன்னும் சில தீயணைப்பு வாகனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.