டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தினகரன் இன்று ஆஜர்
அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இன்று ஆஜரானார்.
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றதாக அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று தினகரன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு வந்தார். இந்த வழக்கு குறித்த ஆவணங்களில் அவர் கையெழுத்திட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மீண்டும் தினகரன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது