டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என நேற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சைபர் க்ரைம் நிபுணர் ஒருவர் பேசினார். மேலும் அவர் இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் மோசடி நடந்ததாகவும், காங்கிரஸ் ஜெயிக்க வேண்டிய சுமார் 200 தொகுதிகளில் தோல்வி அடைந்தததாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை கடுமையாக தேர்தல் ஆணையம் மறுத்தது. மேலும் இதுகுறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் செய்துள்ளது