டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் அக்கட்சிக்கு செல்வாக்கு கூடியிருப்பதாக கருதப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீர் திடீரென ஒருசில தலைவர்கள் விலகி வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை திடீரென அஜய் மாக்கன் ராஜினாமா செய்துள்ளதால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜினாமாவிற்கு பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதூகுறித்து பதிவிட்டுள்ள அஜய் மாக்கான் இதுவரை தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தொண்டர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரான அஜய் மாக்கனின் ராஜினாமாவை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், உடல்நிலை காரணம் காட்டி அவர் பதவி விலகியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Leave a Reply