டோக்லாம் பிரச்சினை தீர்க்கப்பட்டது எப்படி? சுஷ்மா சுவராஜ் விளக்கம்

டோக்லாம் பிரச்சினை தீர்க்கப்பட்டது எப்படி? சுஷ்மா சுவராஜ் விளக்கம்

டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்த பிரச்சினையை தீர்த்தது குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு மந்திரி பதில் அளித்தார். இதுகுறித்து அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறியதாவ்து:

டோக்லாமில் 2017 ஆகஸ்டு 28-ந் தேதி ஏற்படுத்தப்பட்ட நிலைமையில் இருந்து ஒரு அங்குலம் கூட தற்போது மாறவில்லை. அந்த பிரச்சினை ராஜதந்திர முதிர்ச்சியால் தீர்க்கப்பட்டு விட்டது’ என்று கூறினார்.

மேலும் சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்களான மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால் பிரதமர் மோடிக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ்தான் பதிலளித்தார்.

அவர் கூறும்போது, ‘இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியும். ஏனெனில் இந்த அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக நான் சீனாவுக்கு சென்று, அந்த நாட்டு வெளியுறவு மந்திரியை சந்தித்து பேசினேன். எனவே அங்கு நடந்தது அனைத்தும் எனக்கு தெரியும்’ என்று தெரிவித்தார்

Leave a Reply