இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரை சீனாவின் பகுதியாக டுவிட்டரின் வரைபடம் காட்டியதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை டுவிட்டர் நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளது
இது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டது நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் செயல் என தெரிவித்த அவர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்
டிக் டாக் செயலியால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டதால் அச்செயலி தடை செய்யப்பட்டது போல் டுவிட்டரும் தடை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது