தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி கேட்ட இருவருக்கு பார்சலாக வந்த காண்டம்கள்
தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்ட நபர்களுக்கு காண்டம் அனுப்பிய விவகாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அனுமான்கார்க் மாவட்டத்தின் ஷானிபாரி என்ற கிராமத்தை சேர்ந்த மனோகர் லால் மற்றும் விகாஸ் சவுத்ரி ஆகிஓர் தங்கள் ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தகவல்கள் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தனர்.
அவர்களது கேள்விக்கு பதிலாக ஒரு தபால் உறை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பதில்கள் அடங்கிய காகிதத்திற்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட இரண்டு காண்டம்கள் இருந்தது. இதுகுறித்து அவர்கள் இருவரும் கொடுத்த புகாரை அடுத்து, அனுமான்கார்க் மாவட்ட ஆட்சியர் பத்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.