தகுதிக்கு ஏற்ற வேலை தேடுவது எப்படி?

வேலை தேடுவது எப்படி?

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இளைஞர்களுக்கு உள்ளது. தங்கள் படிப்புக்கு ஏற்ற, தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என பல இளைஞர்கள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் சரியான வேலையை தேர்வு செய்வது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்

உங்களுக்கு என்ன தான் நல்ல நேரமாக இருந்தாலும் கூட வேலை தேடுவது என்பது சவாலான ஒன்று. இதற்கு அடிப்படையாக நிறையச் செய்ய வேண்டி வரும் மற்றும் அதனைத் தொடர்ந்து கண்காணித்து உங்களுக்கான சரியான வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு வேலையில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அதனைச் செய்யும் போது எதையோ நீங்கள் இழந்தது போன்றே உங்களுக்குத் தோன்றும். எனவே தான் உங்களுக்கான விருப்பமான ஒரு வேலையைத் தேடுவது என்பது நல்லது. உங்களுக்கான விருப்பமான வேலை ஏதுவென்று நீங்கள் தேர்வு செய்துவிட்டால் வேலையைத் தேடுவது என்பது எளிதாகிவிடும். எளிதாக உங்களுக்கான வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களைத் தேடி எந்த ஒரு அதிருப்தியும் இல்லாமல் பெற முடியும். ஆன்லைனில் வேலை தேடும் போதும் இது மேலே கூறியவை எளிதாக உங்களுக்கானதை தேர்வு செய்யக் கண்டிப்பாக உதவும்

உங்கள் விருப்ப வேலை தேர்வுக்கு ஏற்றவாறு ஒரு கதையை உருவாக்க வேண்டும். பொதுவாக நீங்கள் நேர்காணலில் சந்திக்கும் ஒரு அதிகாரி உங்களைப் பற்றியும், உங்கள் அனுபவங்கள் பற்றியும் கதையாகச் சொல்ல வேண்டும் என்றே விரும்புவார். அப்படிக் கதையாக உங்களைப் பற்றிச் சொல்வதில் நீங்கள் திறமையானவர் என்றால் எளிதாக உங்களுக்கான அந்த வேலை கிடைத்துவிடும். உங்களைப் பற்றிய கதையை நீங்கள் உருவாக்கும் முன்பு அதில் உங்கள் திறன் மற்றும் அனுபவங்களைப் பற்றிக் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. அதில் உங்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். இவற்றை எல்லாம் சேர்த்தது போன்ற ஒரு ரெஸ்யூமை உருவாக்க வேண்டும். உங்களுக்கான கதையைச் சரியாக நீங்கள் தயார் செய்யவில்லை என்றாலும் நேர்முகத் தேர்வுக்குச் செல்லுங்கள். அப்போது உங்களின் சுய மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு தெரியவரும்.

வேலை தேடும் போது உங்களைப் பற்றி நீங்களே மார்க்கெட்டிங் செய்வது என்பது ஒரு முக்கியமான பணியாகும். இதன் மூலம் சிறந்த தக்கங்கள் ஏற்படும். சமுக வலைத்தளங்கள், பிளாகுகள் போன்றவற்றில் உங்களைப் பற்றி நீங்கள் விளக்குதல், கட்டுரைகள் எழுதுதல் நீங்கள் வேலை தேடும் துறை குறித்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கு பெறுதல் போன்றவையும் உங்களைச் சிறந்த வேலை தேடுபவராக மாற்ற உதவும்.

ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன்பு அந்த நிறுவனத்தினைப் பற்றியும் அவர்களது ஊழியர்கள் பற்றியும், வணிகங்கள் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் பணிபுரிய இருப்பது புதிய வேலைவாய்ப்பா அல்லது ஏற்கனவே உள்ளவர்களுக்கான மாற்று வேலையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நிறுவனத்தின் கட்டமைப்பு, எங்கு எல்லாம் வணிகங்கள் நடைபெறுகிறது என்பது தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் விண்ணப்பித்துள்ள வேலையைச் செய்யும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுடன் விவாதியுங்கள், அந்த வேலை வாய்ப்பிலுள்ள சவால்கள் குறித்து அறிந்துகொள்ளுங்கள். நேர்முகத் தேர்வின் போது நீங்கள் செய்ய இருக்கும் வேலை மற்றும் நிறுவனங்கள் குறித்து உங்களுக்கு உள்ள சந்தேகங்களைக் கேட்கலாம். அப்போது உங்களுக்கு அந்த வேலையின் மீது உள்ள ஆர்வம் மற்றும் தீவிரம் போன்றவை மனித வளம் மேம்பட்டாள்ரை கவர உதவும்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது அந்த நிறுவனத்தில் இருந்து உங்களை யாரேனும் ஊழியர்கள் ரெஃபரன்ஸ் செய்தால் அது மிகப் பெரிய அளவில் உதவும். அது மட்டும் இல்லாமல் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் மேலாளர்களைச் சமுக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டும் ரெஃபரன்ஸ் பெற முடியும்.

Leave a Reply