தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் திமுகவில் இணைகின்றார்களா?
செந்தில் பாலாஜி உள்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 முன்னாள் எம்.எல்.ஏக்கள் திமுக-வில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவலை அமமுக-வின் முக்கிய நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சபாநாயகரால் தகுதீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, டிடிவி தினகரனின் அமமுகவில் தற்போது செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர் திமுக-வில் இணையவுள்ளதாகவும், கரூரை சேர்ந்த அமமுக-வின் முன்னணி மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தொண்டர்கள் என பலரும் அவருடன் சேர்ந்து இணைவார்கள் என்றும் கூறப்பட்டது.
செந்தில் பாலாஜி மட்டுமின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர்களும் திமுகவில் சேர மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி வதந்தி என்றும், அப்படி எதுவும் திட்டம் இல்லை என்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.