தங்கப் பத்திர விற்பனையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முதலிடம்

தங்கப் பத்திர விற்பனையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முதலிடம்

1தேசிய அளவில் தங்கப் பத்திர விற்பனையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தங்க இறக்குமதியை குறைக்கும் வகையில், ஒரு கிராம் முதல் 500 கிராம் வரை தங்கத்தை பத்திரமாக முதலீடு செய்யும் திட்டத்தை 2.75 சதவீத வட்டி, 8 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, தமிழக அஞ்சல் வட்டங்களில் கோவை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களில் அதிகளவில் தங்க பத்திர பரிவர்த்தனைகளுடன, பல்வேறு கட்டங்களாக தங்கமும் விற்பனை செய்யப்பட்டது.

இதுவரை 3,493 பரிவர்த்தனைகளில் 17,197 கிராம் தங்கம் ரூ.5,05,56,748-க்கு விற்பனையாகி உள்ளது. இதனால், தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. அத்துடன், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, ரூ.193.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply