தஞ்சை கோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டதா? ஆய்வில் திடுக் தகவல்

தஞ்சை கோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டதா? ஆய்வில் திடுக் தகவல்

இன்று தஞ்சை பெரியகோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், போலீசார் ஆகியோர் திடீரென வருகை தந்து, கோவிலில் இருந்த பக்தர்களை வெளியேற்றிவிட்டு அங்குள்ள சிலைகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் ஒருசில பழங்கால சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜா ராமன், பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு, அதற்கு பதில், வேறு சிலைகள் மாற்றப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தின் பேரில் 2-ம் கட்ட ஆய்வு நடந்தது. சிலைகளுக்கு கீழ், சோழர் காலத்திய தமிழ் உருக்கள் அல்லாமல் தற்காலிக தமிழ் உருக்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

Leave a Reply