தடுப்பூசி சான்றிதழில் பெயர், பிறந்த தேதி மற்றும் வருடம், பாலினத்தில் கவனக்குறைவாக பிழை ஏற்பட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது
தடுப்பூசி சான்றிதழில் பெயர், பிறந்த தேதி மற்றும் வருடம், பாலினத்தில் கவனக்குறைவாக பிழை ஏற்பட்டு இருந்தால் அதை சம்பந்தப்பட்ட நபர்களே ‘கோ-வின்’ ஆப்பில் சென்று திருத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
http://cowin.gov.in இணையதளத்துக்கு சென்று, பதிவு / உள்நுழை (Register/Sign In) என்பதை க்ளிக் செய்து, நமது 10 இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து நம் மொபைலுக்கு வரும் ஓ.டி.பி.யை கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
அதன்பின் தனிநபர் என்ற தகவல் பகுதிக்கு சென்று, Raise an Issue பகுதிக்கு செல்ல வேண்டும். அதில், ‘சான்றிதழில் திருத்தம்’ (Correction in Certificate) என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் பெயர் – பாலினம் – பிறந்த வருடம் போன்ற விபரங்கள் இருக்கும். இதில் எந்த தகவல் பிழையாக உள்ளதோ, அதனை மாற்றி கொள்ளலாம்.