தண்ணீரில் தமிழகம்: வெளிநாடுகள் செல்லும் தலைவர்கள்

தண்ணீரில் தமிழகம்: வெளிநாடுகள் செல்லும் தலைவர்கள்

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து வருவதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நேற்று தமிழக சட்டசமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் புத்தக கண்காட்சி விழா ஒன்றில் கலந்து கொள்ள துபாய் சென்றநிலையில் நாளை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி 6 நாட்கள் பயணமாக ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மழைநீர் வடிகாலுக்கு தீர்வு காணவும், வளர்ந்த நாடுகளில் பின்பற்றும் முறைகளை அறிந்து கொள்ளவும் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மழைநீர் மீட்புப்பணியில் உள்ளாட்சித்துறையின் பங்கு அதிகம் என்ற நிலையில் அந்த துறையின் அமைச்சர் வெளிநாடு செல்வது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

அன்வர்ராஜா எம்.பி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆஸ்திரேலியா பயணம் தமிழகத்திற்கு பயனாக அமையும்

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆஸ்திரேலியா பயணம் தேவையற்றது

ஆர்.எஸ்.பாரதி: பருவ மழை பாதிப்பு இருக்கும் நேரத்தில், அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா செல்ல இருப்பது சரியில்லை

இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்துள்ள தகவலின்படி அமைச்சர் வேலுமணி தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது

Leave a Reply