தந்தை குறித்து பீலா ராஜேஷின் உருக்கமான டுவிட்டர் பதிவு:

பீலா ராஜேஷின் டுவிட்டர் பதிவு

முன்னாள் சுகாதாரதுறை செயலாளரும் தற்போதைய வணிகவரித் துறை செயலாளருமான பீலா ராஜேஷ் அவர்களின் தந்தை வெங்கடேசன் என்பவர் சமீபத்தில் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது.

பீலா ராஜேஷின் தந்தை முன்னாள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வெங்கடேசன் அவர்கள் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் அவர்களின் கணவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட முன்னாள் டிஜிபி வெங்கடேசன் அவர்களின் மறைவிற்கு பீலா ராஜேஷின் சக அதிகாரிகள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பீலா ராஜேஷ் தனது டுவிட்டரில் தந்தை குறித்து உருக்கமான ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

Leave a Reply