2019 டெஸ்டுகளில் முதல் தொடக்க வீரராகக் களமிறங்கி வரும் ரோஹித் சர்மா, லார்ட்ஸ் டெஸ்டில் நேற்று 83 ரன்கள் எடுத்தார். இதுவே வெளிநாடுகளில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி வலுவான நிலையில் உள்ளது. முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எட்டியுள்ளது. ரோஹித் – ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோக்க, ராகுல் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாா். ரோஹித் சா்மா 83 ரன்கள் சோத்தாா்.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 83 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வெளிநாடுகளில் இது அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும். வெளிநாடுகளில் ரோஹித் சர்மா எடுத்த அதிக ரன்கள்
2021-ம் வருடம் – இங்கிலாந்துக்கு எதிராக 83 ரன்கள்
2015 – இலங்கைக்கு எதிராக 79 ரன்கள்
2014 – நியூசிலாந்துக்கு எதிராக 72 ரன்கள்
2018 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 63 ரன்கள்*
2015 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 ரன்கள்