வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என தேமுதிக குறித்து கருத்துக்கள் உலவி வந்தாலும் தற்போதைய நிலையில் அந்த கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் நிலையில் உள்ளது
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டுமே தருவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது ஆனால் 20 தொகுதிகளுக்கும் அதிகமாக தேமுதிக கேட்டு வருவதால் அந்த கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் எங்கள் முதல்வர் விஜயகாந்த், எங்கள் சின்னம் முரசு என்று எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக்கிலும், தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம் என்று விஜயபிரபாகரன் பேசியதையும் பார்க்கும்போது தேமுதிக தனித்து போட்டுவிடலாம் என்று கூறப்படுகிறது