தனித்து போட்டியிட தேமுதிக தயங்காது: திமுக, அதிமுகவுக்கு பிரேமலதா எச்சரிக்கை

தனித்து போட்டியிட தேமுதிக தயங்காது: திமுக, அதிமுகவுக்கு பிரேமலதா எச்சரிக்கை

தேமுதிக கட்சியின் பலத்தை பரிசீலித்து கெளரவமான தொகுதிகள் அளித்தால் மட்டுமே கூட்டணி என்றும் இல்லையேல் தேமுதிக தனித்து போட்டியிட தயங்காது என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என்றும், அதே நேரத்தில் எங்களை குறைத்து மதிப்பிடாமல் கூட்டணியில் உரிய தொகுதிகள் தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த தேமுதிகவை, அதிமுக,திமுக என மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருவது அரசியல் வல்லுனர்களால் வித்தியாசமாக பார்க்கப்பட்டு வருகிறது

Leave a Reply