தனித்து விடப்படுகிறது தேமுதிக: அதிமுக, திமுக கைவிட்டதால் சிக்கல்!

தனித்து விடப்படுகிறது தேமுதிக: அதிமுக, திமுக கைவிட்டதால் சிக்கல்!

அதிமுக, திமுக என ஒரே நேரத்தில் இரண்டு கூட்டணியிலும் பேரம் பேசி வந்த தேமுதிக, தற்போது இரண்டு கூட்டணியிலும் பேரம் படியாததால் தனித்துவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முதலில். திமுகவுடனான பேச்சுவார்த்தையில் 4 தொகுதிகள் கேட்டு இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கிடையே அக்கட்சி அதிமுக பக்கம் திரும்பியது. இந்த பேரத்தில் 2 தொகுதிகளை மட்டுமே விட்டுக் கொடுக்க அதிமுக ஒப்புக்கொனது. இவ்வாறாக இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று அதிமுக, திமுக என இரண்டுமே கதவை அடைத்துக் கொண்டதாக செய்தி வெளியானது.

அதிமுக, தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் தேமுதிக தனித்து விடப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply