தனிமைப்படுத்தப்பட்டவர்களை வாட்ஸ் அப் மூலம் கண்காணிக்கும் காவல்துறை!

சைபர் கிரைம் போலீசார் அதிரடி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை மீறி சில சமயம் வெளியே வந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதால் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வாட்ஸ்அப் மூலம் கண்காணிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டு அவர்களது செல்போன் எண்கள் சைபர் கிரைம் மூலம் கண்காணிக்கப்படும்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாராவது வெளியே சென்றால், உடனடியாக சைபர் கிரைம் போலீசார் வாட்ஸ் அப் மூலம் கண்டுபிடித்து அதனை உடனே அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிப்பார்கள். அவர்கள் உடனே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சென்றது குறித்து விசாரணை நடத்துவார்கள்

இவ்வாறு வாட்ஸ்அப் மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசார் கண்காணிப்பதால் வீட்டை விட்டு வெளியே வருவது முற்றிலும் குறைக்கப்படும் என்று காவல்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக போலீசார் இவ்வாறு பல்வேறு வழிகளில் கொரோனா வைரஸை தடுக்க போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply