தனியார் மயமாகிறதா ரயில்வே: 100 வழித்தடங்களுக்கு அனுமதி என தகவல்

தனியார் மயமாகிறதா ரயில்வே: 100 வழித்தடங்களுக்கு அனுமதி என தகவல்

சென்னை – ஹவுரா, சென்னை – ஓக்லா போன்ற 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதுகுறித்த அறிக்கையில் தனியார் பங்களிப்புடன் பயணிகள் ரயில் சேவை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து பல்வேறு தரப்பினருடன் விவாதம் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது

விவாதத்திற்கு பின் நாடு முழுவதும் 100 வழித்தடங்கள் தனியார் ரயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் ரயில்களை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply