தனி மாவட்டம் வேண்டும்: மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்

தனி மாவட்டம் வேண்டும்: மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதில் இருந்து புதிய மாவட்டங்களில் உருவாகி வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்

இந்த நிலையில் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பல பகுதிகளில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மயிலாடுதுறையில் இரண்டாவது நாளாக கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நாகை மாவட்டம் நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply