தனுஷின் ரகசியத்தை ரிலையன்ஸ் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்துவிட்டு இந்தியா திரும்பி உள்ள படக்குழுவினர் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக உள்ளனர்.
இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு சுருளி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவியது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனுஷ் நடிப்பில் உருவான சுருளி படத்தை தங்களது நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு சுருளி என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனுஷின் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் கசியவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Massive line up by #RelianceEntertainment for 2020 👌👌#Darbar -9th Jan#1917Movie -17th Jan#ImtiazAli’s next -14th Feb#Sooryavanshi -27th Mar#ThisIs83 -10th Apr
Remake of #GirlOnTheTrain -8th May#Suruli -TBF@RelianceEnt@TheAaryanKartik @RanveerOfficial @ParineetiChopra pic.twitter.com/ej2SLiRWm1— RJ🇬️9⃣ Divya (दिव्य) Solgama (@DIVYASOLGAMA) January 7, 2020