தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன். அல்லு அர்ஜூன்
பிரபல இயக்குனர் லிங்குசாமி விரைவில் விஷாலின் சண்டக்கோழி’ படத்தை இயக்கவுள்ள நிலையில் அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் தமிழில் அறிமுகமாகும் படத்தையும் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.,
இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தபோது இதில் பேசிய அல்லு அர்ஜூன் ‘நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில் தான் , 2௦ வருடமாக இங்கே தான் இருந்தேன். எனக்கு சொந்த ஊர் சென்னை தான். நான் மேடைக்கு வந்து தமிழில் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன்.
நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை. அதற்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடி தமிழ் படம் நடிக்க வேண்டும் என்பது தான். எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. நான் இதற்காக பல நாட்களாக காத்திருந்தேன் என்று கூறினார்.
இந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமி பேசியபோது, ‘நான் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று என்னுடைய கிராமத்தில் உள்ளவர்களிடம் சொன்னபோது அவர்களில் சிலர் என்னிடம் ” நாங்கள் அல்லு அர்ஜுனின் நடனத்திருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் ” என்று கூறினர். அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் நான் அல்லு அர்ஜுனை வைத்து நான் தமிழில் இயக்கும் நேரடி தமிழ் படம் இருக்கும். நான் ‘சண்டக்கோழி’ திரைப்படத்தை முடித்த பின்னர் இப்படத்தை துவங்கவுள்ளேன் என்று கூறினார்.