தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டாம்: உதவி செய்ய முன்வந்த கேரள முதல்வருக்கு தமிழக அரசு பதில்!
தமிழகத்தில் தற்போது தேவைக்கேற்ப தண்ணீர் உள்ளதாகவும் தண்ணீர் தந்து உதவ வேண்டாம் எனவும் எங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் அண்டை மாநில முதல்வர்களுடன் பேசி தமிழகத்திற்கு தண்ணீர் வரவழைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு ரயில் மூலம் அனுப்ப கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வந்தார். ஆனால் தமிழகத்தில் தற்போது தேவைக்கேற்ப தண்ணீர் உள்ளதாகவும் தண்ணீர் தந்து உதவ வேண்டாம் எனவும் எங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு என்ன விளக்கம் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்