தமிழகத்திற்கு மைசூர்பாகா? தடுத்து சாப்பிடுவோம் என வாட்டால் நாகராஜ் சபதம்!
மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இந்த வதந்தியை உண்மை என நம்பிய வாட்டாள் நாகராஜ் ஆவேசமாக ஒருசில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் ஒருசில பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் மைசூர்பாகுவிற்கான குறியீடு தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக டுவிட்டரில் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. இந்த வதந்தியை உண்மை என நம்பிய வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘காவிரி, மேகதாதுவில் அமைதி காத்தது போல், மைசூர் பாகு விஷயத்தில் அமைதியாக இருக்க மாட்டோம்’ என்றும், தமிழகத்திற்கு மைசூர்பாக்கை கொண்டு செல்ல முடியாத வகையில் தடுப்போம் என்றும், அப்படி மீறி கொண்டு செல்லப்பட்டால் மாநில எல்லையில் மைசூர்பாக்கை தடுத்து நாங்களே சாப்பிட்டு விடுவோம் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு மைசூர்பாகுவிற்கான புவிசார் கிடைத்துள்ளது என்பது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றும், சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி என்றும் செய்தியாளர்கள் கூறியபின்னரே அவர் அமைதியானதாக தெரிகிறது