தமிழகத்திலும் கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்திலும் கனமழை: வானிலை ஆய்வு மையம்

கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென் கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல்சீற்றமாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply