தமிழகத்தில் அஜினோமோட்டோ தடையா? அமைச்சரின் அதிரடி தகவல்
உடல் நலனுக்கு கேடுவிளைவிக்க்கும் அஜினோமோட்டோவை தடை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹோட்டல்களில் உணவுபொருட்களின் சுவையை அதிகரிக்க அஜினோமோட்டோ பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த அஜினோமோட்டோ உடல்நலத்திற்கு தீங்கு என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அஜினோமோட்டோவை தடை செய்ய நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருவதை அடுத்து அஜினோமோட்டோவை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உறுதி அளித்துள்ளார். அஜினோமோட்டோ தடை குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என கருதப்படுகிறது