தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்யலாம் என்ற அனுமதிப்பதற்கான அரசாணை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக, தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதிக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய வேண்டும், ஓவர் டைம் என்றால் 10.30 பணி புரிய வேண்டும் என்றும், பெண் பணியாளர்கள் இரவு 8 மணிக்கு மேல் பணியில் இருக்க கூடாது என்றும், ஒருவேளை இரவில் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் இரவு 8 முதல் காலை 6 வரை பணியில் இருக்க பெண்கள் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி பெண் பணியாளர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், பெண்கள் புகாரளிக்க ஏதுவாக கமிட்டி அமைத்து அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அரசு நிபந்தனை விதித்துள்ளது.

Leave a Reply