என்னென்ன நிபந்தனைகள்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது
அந்த வகையில் இன்றும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஊரடங்கில் பால் மற்றும் மருந்து கடைகள் தவிர வேறு எந்த கடைகள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காய்கறி இறைச்சி மளிகை கடைகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ஹோட்டல் டீக்கடைகள் பெட்ரோல் பங்குகள் என எதுவும் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது