தமிழகத்தில் இன்று 161 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள்

சென்னையில் மிக அதிக பாதிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 பேர்கள் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் 138 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 என்பதும், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 என்பதும், உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஆறுதலுக்குரிய விஷயம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இன்று 48 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 1258 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply