தமிழக அரசு அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கான இபாஸ் முறை தொடரும் என்றும் இபாஸ் முறையை ரத்து செய்யும் திட்டமில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்ல இபாஸ் நடைமுறை அமலில் உள்ளது. ஆனால் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், மற்ற மாநிலங்களுக்குச் செல்லவும் மாநில அரசு எந்தவித தடையும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனை ஏற்று கொண்ட புதுவை உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் இபாஸ் முறையை ரத்து செய்தது. இதனால் தமிழகத்திலும் இபாஸ் முறை ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கான இணையவழி அனுமதிச் சீட்டு (இ- பாஸ்) முறை தொடரும் எனவும், இதை இப்போதைக்கு ரத்து செய்யும் திட்டமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.