தமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:

பரபரப்பு தகவல்

தமிழகத்தில் பொது மக்களின் சேவைக்காக 7 சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என மிழக அரசுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தி இருந்தது

திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், கோவை – காட்பாடி, செங்கல்பட்டு – திருச்சி, அரக்கோணம் – கோவை, கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள், வரும் 31ம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

ஜூலை 31க்கு பின்னர் இந்த ரயில்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply