தமிழகத்தில் இருந்து மும்பைக்கு ஹெலிகாப்டரில் சென்ற மாட்டுப்பால்?
கும்பகோணம் மற்றும் சுவாமிமலை பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதிக்கு ஹெலிகாப்டர் வருவது குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கும் எந்த தகவலும் வராததால் அங்கு குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் மருதநல்லூர் கிராமத்தில் உள்ள மாட்டு பண்ணையில் இருந்து மும்பைக்கு பாலை கொண்டு செல்வதற்காக அந்த ஹெலிகாப்டர் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.