கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து தமிழக முதல்வர் நேற்று அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்
பெற்றோர்களின் மன நிலையைப் பொருத்தே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார் மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் இதனையடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் மனநிலை என்ன என்பதை முழுமையாக அறிந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
தற்போது ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டதை தமிழக அரசு பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு குறித்து விரைவில் தமிழக அரசின் சார்பில் பெற்றோர்களின் மனநிலையை அறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது