கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே
இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன
இதனால் பேருந்துகள் சிறப்பு ரயில்கள் இயங்குகின்றன, கடைகள் திறக்கப்பட்டுள்ளன, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர்
இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதை அடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு தளர்வு கொடுக்கப்படுமா? குறிப்பாக திரையரங்குகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
இது குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பு செய்வார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன