தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சேலம் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply