தமிழகத்தில் 500 புதிய பேருந்துகள்: தொடக்க விழாவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்
பொதுமக்களின் போக்குவரத்து சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக ரூ.158.72 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் விதமாக இன்று 7 பேருந்துகளின் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இந்த தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணண முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
பொதுமக்களின் போக்குவரத்து சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக ரூ.158.72 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கும் விதமாக இன்று 7 பேருந்துகளின் சேவை துவக்கி வைக்கப்பட்டது. #TNGovt pic.twitter.com/68PYZim2Fn
— O Panneerselvam (@OfficeOfOPS) July 4, 2019