தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.சட்டமன்ற தேர்தல் காரணமா?

தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.சட்டமன்ற தேர்தல் காரணமா?
IPS
தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பதவியுயர்வு அடிப்படையில் அவ்வப்போது ஒருசில அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் நேற்று ஒரே நாளில் 58 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்றத்தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்தே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக அரசியல் கட்சிகளின் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இந்நிலையில் மாற்றப்பட்ட அதிகாரிகளின் முழுவிபரங்கள் வருமாறு:

தமிழகத்தில் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 58 போலீஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.க்களில் 5 பேர் ஏ.டி.ஜி.பி.க்களாகவும், டி.ஐ.ஜி.க்கள் 15 பேர் ஐ.ஜி-க்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 8 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, பணிமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பெயர் விவரம், அவர்கள் தற்போது வகித்த பதவி மற்றும் புதிய பதவி விவரம் வருமாறு:

1. டி.எஸ்.அன்பு – சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு – நெல்லை நகர போலீஸ் கமிஷனர் மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி.

2. பிரேம் ஆனந்த் சின்கா – மத்திய போதைப்பொருள் தடுப்பு சென்னை மண்டல இயக்குநர் மற்றும் சூப்பிரண்டு – இவருக்கு அதே துறையில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு.

3. தீபக் எம்.தாமோர் – மும்பை சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு – அதே துறையில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு.

4. டி.செந்தில் குமார் – நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு – தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.

5. அனிசா உசேன் – சிறப்பு காவல்படை கமாண்டன்ட் டெல்லி – விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.

6. நஜ்முல் ஹோடா – சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் – சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர்.

7. மகேந்திர குமார் ரத்தோடு – ஆந்திராவில் போலீஸ் சூப்பிரண்டு – ஆந்திராவில் டி.ஐ.ஜி.

8. எஸ்.மனோகரன் – சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் – சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர்.

9. வி.வனிதா – கடலோர காவல் குழும சூப்பிரண்டு – கடலோர காவல் குழும டி.ஐ.ஜி.

10. என்.அறிவுச் செல்வம் – திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. – சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.

டி.ஐ.ஜிக்கள் பதவி உயர்வு:

11. ஆயுஸ் மணி திவாரி – கோவை சரக டி.ஐ.ஜி. – சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.

12. மகேஸ்வர் தயாள் – மத்திய அரசு பணியில் டி.ஐ.ஜி. – மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.

13. சுமித் சரண் – விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. – சேலம் நகர போலீஸ் கமிஷனர்.

14. ஏ.அமல்ராஜ் – சேலம் போலீஸ் கமிஷனர் – கோவை போலீஸ் கமிஷனர்.

15. அபின் தினேஷ் மோடக் – மும்பை என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. – அதே துறையில் ஐ.ஜி.

16. சஞ்சய் குமார் – தஞ்சை சரக டி.ஐ.ஜி. – மாநில குற்ற ஆவண காப்பக ஐ.ஜி.

17. கே.பெரியய்யா – சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி. – ஊர்க்காவல் படை ஐ.ஜி.

18. ஏ.ஜி.மவுரியா – சிறைத்துறை டி.ஐ.ஜி. – அதே துறையில் ஐ.ஜி.

19. ஏ.பாரி – தலைமையக டி.ஐ.ஜி. – தலைமையக ஐ.ஜி.

20. என்.கே.செந்தாமரைக்கண்ணன் – திருச்சி சரக டி.ஐ.ஜி. – சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.

21. கே.என்.சத்தியமூர்த்தி – காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. – மத்திய மண்டல ஐ.ஜி.

22. எம்.ராமசுப்பிரமணி – மத்திய மண்டல ஐ.ஜி. – ரெயில்வே ஐ.ஜி.

24. சி.ஸ்ரீதர் – சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் – சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர்.

25. எஸ்.முருகன் – நெல்லை சரக டி.ஐ.ஜி. – தெற்கு மண்டல ஐ.ஜி.

26. வி.வரதராஜு – சென்னை உளவு பிரிவு இணை கமிஷனர் – அதே துறையில் கூடுதல் கமிஷனர்.

27. எம்.சி.சாரங்கன் – சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. – அதே துறையில் ஐ.ஜி.

28. ஏ.ஜி.பொன் மாணிக்க வேல் – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. – அதே துறையில் ஐ.ஜி.

ஐ.ஜி.க்கள் பதவி உயர்வு:

29. சங்கர் ஜிவால் – ஈரோடு சத்தியமங்கலம் அதிரடிப்படை ஐ.ஜி. – அதே துறையில் கூடுதல் டி.ஜி.பி.

30. ஏ.கே.விஸ்வநாதன் – கோவை போலீஸ் கமிஷனர் – சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி.

31. ஆபாஷ் குமார் – சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் – போலீஸ் அகாடமி கூடுதல் டி.ஜி.பி.

32. டி.வி.ரவிச்சந்திரன் – மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி.) இணை இயக்குனர் – அதே துறையில் கூடுதல் டி.ஜி.பி.

33. சீமா அகர்வால் – ரயில்வே ஐ.ஜி. – மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி.

34. அபய்குமார் சிங் – தென் மண்டல ஐ.ஜி. – மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஐ.ஜி.

35. ஆசிஷ் பெங்ரா – மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. – சென்னை அமலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி.

எஸ்.பி.க்கள் மாற்றம்:

36. பி.அரவிந்தன் – தென்காசி இணை எஸ்.பி. – விருதுநகர் மாவட்ட எஸ்.பி..

37. எஸ்.மகேஷ்வரன் – விருதுநகர் மாவட்ட எஸ்.பி. – கோவை தலைமையக துணை கமிஷனர்.

38. சந்தோஷ் கடிமணி – மயிலாடுதுறை இணை எஸ்.பி. – நெல்லை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.

39. சுரேஷ்குமார் – நெல்லை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் – சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர்.

40. முரளி ரம்பா – கோவில்பட்டி இணை எஸ்.பி. – நீலகிரி மாவட்ட எஸ்.பி..

41. பண்டி கங்காதர் – குளச்சல் இணை எஸ்.பி. – மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.

42. சசி மோகன் – திருமங்கலம் இணை எஸ்.பி. – திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.

43. அமித் குமார் சிங் – திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் – சென்னை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.

44. நிஷா பார்த்திபன் – கோட்டைக்குப்பம் இணை எஸ்.பி. – கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.

45. ரம்யா பாரதி – கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் – கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி..

46. டாக்டர் எம்.சுதாகர் – கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி. – சென்னை கியூ பிரிவு போலீஸ் எஸ்.பி.

47. வண்டிதா பாண்டே – சிவகங்கை இணை எஸ்.பி. – கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.

48. ஜோஷி நிர்மல் குமார் – கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. – சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர்.

49. கல்யாண் – தர்மபுரி இணை எஸ்.பி. – சென்னை பரங்கிமலை துணை கமிஷனர் (பரங்கிமலை துணை கமிஷனராக இருக்கும் அவினாஷ் குமார் டி.ஜி.பி. அலுவலக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.)

50. திஷா மிட்டல் – சென்னை ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டன்ட் – திருப்பூர் நகர துணை கமிஷனர்.

51. ஆர்.திருநாவுக்கரசு – திருப்பூர் நகர துணை கமிஷனர் – கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி.

52. பி.கண்ணம்மாள் – கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. – சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்.

53. எஸ்.லட்சுமி – சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் – சென்னை தலைமையக துணை கமிஷனர்.

54. சந்தோஷ்குமார் – சென்னை தலைமையக துணை கமிஷனர் – சென்னை கமாண்டோ படை எஸ்.பி.

55. அபிஷேக் தீட்சித் – கமாண்டோ படை எஸ்.பி. – சிறப்பு காவல்படை கமாண்டன்ட் டெல்லி.

56. மயில்வாகனன் – ராமநாதபுரம் எஸ்.பி. – தஞ்சாவூர் எஸ்.பி.

57. தர்மராஜன் – தஞ்சாவூர் எஸ்.பி. – கன்னியாகுமரி எஸ்.பி.

58. மணிவண்ணன் – கன்னியாகுமரி எஸ்.பி. – ராமநாதபுரம் எஸ்.பி

Leave a Reply