தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு செய்வதாக சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் குற்றச்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை என்றும், இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்றும் அவர்களுக்கும் இந்தி தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது