பெரும் பரபரப்பு
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென பெங்களூரிலும் ஹிந்தி எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் உள்ள ஹிந்தியை உடனடியாக நீக்க வேண்டும் என கன்னட வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் கன்னடம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கன்னட வளர்ச்சிக் கழகம் முதலில் ஹிந்தியை நீக்க வேண்டும் அல்லது இந்தியாவில் உள்ள 22 மொழிகளிலும் எழுத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
ஹிந்தியை நீக்கிவிட்டு கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயரை எழுத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் ஹிந்தி எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது