தமிழகம் வரும் சீன அதிபருக்கு முக ஸ்டாலின் வரவேற்பு!

தமிழகம் வரும் சீன அதிபருக்கு முக ஸ்டாலின் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சீன அதிபரும் இந்திய பிரதமரும் வரும் 11ஆம் தேதி வருகை தரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தில் உள்ளது

இந்த நிலையில் தமிழகம் வரும் சீன அதிபருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; இந்திய திருநாட்டை போலவே மிகப்பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், மிக நீண்ட நிலப்பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் மேன்மைமிகு அதிபர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜி ஜின்பிங் அவர்கள் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என மனமார வரவேற்கின்றேன்’ என்று முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply