தமிழக அரசின் புதிய சொகுசு பேருந்துகளில் கட்டணம் எவ்வளவு?

தமிழக அரசின் புதிய சொகுசு பேருந்துகளில் கட்டணம் எவ்வளவு?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று புதிய சொகுசு பேருந்துகளை நேற்று தொடங்கி வைத்தார். படுக்கை வசதி, கழிப்பிட வசதி, சி.சி.டி.வி. கேமரா, சொகுசு இருக்கைகள், உள்ளிட்ட பல வசதிகள் கொண்ட இந்த பேருந்துகளில் கட்டணம் எவ்வளவு என்பதை பார்ப்போமா

இந்த புதிய சொகுசு பேருந்துகளில் 3 வகையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. படுக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2 வீதம் கட்டணமும், குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.55-ம், அல்ட்ரா டீலக்ஸ் ஏ.சி இருக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.30-ம், ஏ.சி. வசதி அல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

சென்னை-மதுரை ஏ.சி வசதி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply