தமிழக அரசியலில் குதிக்கும் நடிகை ஸ்ரீரெட்டி
கடந்த சில மாதங்களாக தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தமிழகத்தின் முக்கிய கட்சி ஒன்றில் இணைந்து அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆந்திர அரசியலில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக ஏற்கனவே தான் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும், இருப்பினும் தனக்கு தமிழக அரசியலில் ஈடுபடவே விருப்பம் என்றும் கூறிய ஸ்ரீரெட்டி விரைவில் தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சி ஒன்றில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கமல்ஹாசன் நடத்தவுள்ள ‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு சேனல் நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அந்த அழைப்பை தான் நிராகரித்துவிட்டதாகவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.