தமிழக அரசில் சமையல் வேலை! தகுதி இருந்தால் விண்ணப்பியுங்கள்

தமிழக அரசில் சமையல் வேலை! தகுதி இருந்தால் விண்ணப்பியுங்கள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை : சமையலர்( ஆண்)

காலியிடங்கள்: 13

வேலை: சமையலர் (பெண்)

காலியிடங்கள் : 19

சம்பளம் : மாதம் ரூ.15,700

வயது வரம்பு : 01.07.2019 தேதியின் படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 27.9.2019

Leave a Reply