தமிழக அரசு, சிறப்பாக செயல்படுகிறது: நிதிக்குழு தலைவர் என்.கே.சிங்
சென்னை தலைமைசெயலகத்தில் , செய்தியாளர்களை சந்தித்த 15 வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங், தமிழக அரசு அதிகாரிகள், மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் கருத்தகளை நல்ல முறையில் விளக்கியதாகவும் கூறினார்.
* தமிழக அரசு, சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலமாக திகழ்வதாகவும், இந்தியாவிற்கு, பொருளாதார ரீதியாக முக்கிய பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
* தமிழகம், மிக வேகமாக நகரமயமாகி வருவதாக குறிப்பிட்ட அவர், சென்னை போன்ற நகரங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீ்ர், மழை, வெள்ளம் வெளியேற்றுவதற்கான திட்டம் போன்றவற்றை உருவாக்க வேண்டி உள்ளதாக கூறினார்.
* தமிழகத்தில், மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட நிலையில், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு குடியேறுவோர் எண்ணிக்கை அதிகிரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
* தமிழக அரசின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து, அக்டோபர் இறுதக்குள் அறிக்கையை வழங்குவோம் என்றும் நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்துள்ளார்.