தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு: கைது செய்யப்படுவாரா?
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டதாக தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 500 பேர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை