தமிழக சர்கார் – விஜய்யின் சர்கார்: மோதல் தேவையா?
விஜய் நடித்த சர்கார் படத்தில் ஒருசில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி போராட்டம் செய்த அதிமுகவினர், சில நாட்களுக்கு முன் வெளிவந்த ‘நோட்டா’ திரைப்படத்தில் ‘ஸ்டிக்கர் அரசியல்’ உள்பட பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தபோது போராட்டம் செய்யாதது ஏன்?
அதேபோல் சமீபத்தில் வெளிவந்த ‘தமிழ்ப்படம் 2’ திரைப்படத்தில் கடந்த இரண்டு வருடங்களில் நடந்த பல அரசியல் நிகழ்வுகளை கேலிக்குரிய வகையில் படமாக்கியபோது அந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? இதுகுறித்து அந்த படத்தின் இயக்குனரே குமுறியுள்ளார் என்பது வேறு விஷயம்
இலவசம் வேண்டாம் என்று ‘சர்கார்’ படத்தில் தான் முதலில் சொல்லப்பட்டதா? இதற்கு முன்னர் ‘வள்ளி’ படத்தில் ரஜினியும், ‘ஜீ’ படத்தில் அஜித்தும் பேசியுள்ளார். அப்போதெல்லாம் நடக்காத போராட்டம் ‘சர்கார்’ படத்திற்கு மட்டும் நடப்பது ஏன்?